கருணாநிதி காமராஜருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை
கருணாநிதி காமராஜருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. காமராஜர் இறந்தபோது அப்போது முதல்வராக இருந்த மு. கருணாநிதி அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் ஒதுக்க முடியாது என கூறியதாக வாட்ஸ்ஆப்பிள் செய்திகள் பரவியது. இந்த செய்திக்கான ஆதாரங்கள் கொடுக்க படவில்லை. காமராஜரின் உடல் புதைக்க படவில்லை. எரியூட்ட பட்டது. அவரின் மேடை பேச்சுகளில் தனது நினைவிடம் ராஜாஜியின் நினைவிடத்துக்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூறியது ஆவணங்களில் உள்ளது. இதனை பற்றி மேலும் தகவல் தெரிந்தால் இப்பக்கத்தில் எடிட் செய்து அறிய தரலாம்.
மறைந்த காமராசரை மெரினாவில் புதைக்கச் சொல்லி யாரும் கேற்கவில்லை எனவும் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எரியூட்டத் தான் அன்றைய காங்கிரஸ் சார்பில் ஏற்பாடாகியிருந்ததாகவும் பத்திரிகைகளும் மக்களும் கூறினார்கள். ஆனால், அதை மாற்றி, அரசு இடத்தை ஒதுக்கி, அக்டோபர் 2 காந்தியார் பிறந்தநாளில் மறைந்த காமராசருக்கு மரியாதை தரும் வகையில் காந்தி மண்டபத்துக்கு அருகில் நினைவிடம் அமைக்க ஏற்பாடு செய்தார் கலைஞர் என்று ஆய்வு கூறுகிறது. கொட்டும் மழையில், தலையில் முண்டாசைக் கட்டிக் கொண்டு, தானும் களத்தில் நின்று அந்த இடத்தை சுத்தம் செய்து தயார் செய்தார் . அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சியை நடத்தினார் என்று பத்திரிகைகளும் மக்களும் கூறினார்கள். [1] [2]
Facebook thread
https://www.facebook.com/1524658074499391/posts/1946448698986991/
[4] [5]
- ↑ https://www.vikatan.com/news/coverstory/66196-kamarajar-was-praised-by-his-political-opponents.html
- ↑ https://twitter.com/padalurvijay/status/1028583578693582848
- ↑ https://www.thenewsminute.com/article/did-karunanidhi-deny-rajaji-and-kamaraj-marina-burial-86175
- ↑ https://www.indianexpress.com/article/opinion/editorials/october-3-forty-years-ago-death-of-kamaraj/lite/
- ↑ https://books.google.com/books?id=bOjT3qffnMkC